தருமபுரியில் அரேபியா நாட்டின் மரம் கொத்து கொத்தாக காய்த்து கட்டு கட்டாக பணம் தரும் மரம்..!
தருமபுரி அருகே 34 வகையான பேரிச்சை மரங்களை வளர்த்து வரும் விவசாயி ஒருவர் தற்போது இந்த பேரிச்சை பழம் அறுவடை தொடங்கியது, ஒரு கிலோ 150 முதல் 600 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் வராததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்து கொண்டு இருந்த நிலையில் அரிய குலத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்ற விவசாயி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய நாட்டில் இருந்து பேரிச்சை நாற்றுக்களை வாங்கி வந்து இங்கு விதைத்து பார்த்துள்ளார் இந்த பேரிச்சை நாற்றுகள் நல்ல வளர்ந்து மரங்களாக ஆகி பழங்கள் கொத்து கொத்தாக பழுத்து தொங்கியது. இதை பார்த்து விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பேரிச்சை பழம் அறுவடை செய்து உள்ளூர் மற்றும் வெளியூர்க்கு ஏற்றுமதி செய்கிறார். இது போன்று ஆண்டுக்கு ஒரு முறை சாகுபடி செய்து விற்பனை செய்து வரும் நிஜாமுதீன் கூறியதாவது; அரேபியா நாட்டில் வேலை செய்த போது விவசாயத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.
இதனால் பேரிச்சை நர்சரி பண்ணைக்கு சென்று அங்கு பேரிச்சை சாகுபடி வளர்க்கும் முறைகள் குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து 250 பேரிச்சை கன்றுகள் வாங்கி இதனை 11 ஏக்கரில் பேரிச்சை பண்ணையாக மாற்றினேன். கோவை, திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் வேளாண்மை மாணவர்கள் வந்து பேரிச்சை வளர்ப்பு பராமரிப்பு குறித்து கேட்டு தெரிந்து கொள்கின்றனர்.
மேலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் வந்து பேரிச்சை கன்றுகளை வாங்கி செல்கின்றனர். தற்போது வெளிநாட்டிற்கும் நாற்றுக்கால் ஏற்றுமதி ஆகிறது 34 வகையான பேரிச்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஜூலை மாதம் அறுவடை தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை இந்த சீசன் இருக்கும் ஒரு கிலோ பேரிச்சை 150 முதல் 600 வரைக்கும் தோட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார். பாலைவனங்களில் மட்டுமே விளையும் பணம் காயிக்கும் பயிரான பேரிச்சை தருமபுரி மாவட்ட விவசாயிகள் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வறட்சியால் விவசாயத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு பேரிச்சை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

.jpg)

Comments
Post a Comment