ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்..!

 தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு இந்திய மூல நிவாசி  காவல் படையினர் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வலியுறுத்தியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் தலித் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் தாயக மக்கள் கட்சி மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில இளைஞர் அணி செயலாளர் பருதிவளவன், மாவட்டத் தலைவர் பிரசாந்த், மாவட்ட செயலாளர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் குறிஞ்சி வேந்தன், அம்பேத்கர், சந்திரசேகர், பழ முனுசாமி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!