பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..!

 தருமபுரி மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தருமபுரி சட்டமன்ற அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி. வெங்கடேஷ்வரன் கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் இக்கூட்டத்தின் தீர்மானங்கள் வெளியிட்டனர். வருகின்ற ஜுலை.25 பசுமைத் தாயகம் தினத்தை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட பசுமைத் தாயகத்தின் சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் மரக்கன்று நடுதல், கட்சி கொடியேற்றுதல், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள், ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்குதல் போன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்திட வேண்டும் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் விரைந்து செயல்படுத்த தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கி விரைந்து தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.  காவிரி ஆறு தருமபுரி மாவட்டத்தின் வழியாக தான் முதலில் நுழைகிறது. இம்மாவட்டம் வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கிறது. மழைக்கால உபரிநீரை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களில் நிரப்புகின்ற வகையில் காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்தி தருமபுரி மாவட்ட விவசாய பெருமக்கள் விவசாய தொழிலை மேம்படுத்துக்கின்ற வகையில் இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானம் வைத்தனர்.

இதில் மாநில துணை தலைவர் சாந்தமுர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி, பசுமைத் தாயக மாநில துணை செயலாளர் மாது, சுப்ரமணி, காமராஜ், கிருஷ்ணன், ராமகிருஷ்ணன், சின்னசாமி, தேவேந்திரன், பாலசந்தர், தங்கராஜ், மாது, வெங்கடாசலம், தகடூர்தமிழன், மணி, கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜா, சரவணன், சக்தி, அன்புகார்த்திக், பச்சமுத்து, சிலம்பரசன், துரை, அறிவு, சக்திவேல், சதாசிவம், மணிகண்டன், மாதேஷ், முருகன், இராஜீவ்காந்தி, சிலம்பரசன், சஞ்சீவன், யுவராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.


Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!