திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்வு, நியாய விலை கடைகளில் பருப்பு, பாமாயில் எண்ணெய் நிறுத்திய திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையேற்று கண்டன உரையாற்றினார். இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்புரை ஆற்றினார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் சங்கர் முன்னிலை வகித்தார். கேப்டன் மன்ற துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, தொழிற்சங்க துணைத்தலைவர் விஜய் வெங்கடேஷ், வர்த்தக அணி செயலாளர் குமார், மாவட்ட வைத்திய தலைவர் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சுரேஷ் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment