இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் அலைமோதும் பொதுமக்களின் கூட்டம்..!

தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக அமைந்துள்ள தொப்பி வாப்பா பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது. 

இந்த பிரியாணி கடையை தருமபுரி கிளை உரிமையாளர் சாஜித் அவர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, புரட்சித்தலைவி அம்மா பேரவை தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் கலந்து கொண்டனர். இந்த தொப்பி வாப்பா பிரியாணி கடை சனிக்கிழமை திறப்பு நாளான இன்று நாளையும் பிரியாணிகளை சலுகையில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், மட்டன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என சிறப்பு சலுகையுடன் வழங்கி வருகின்றனர். 

இதனால் தருமபுரி சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பிரியாணி பிரியர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என கூட்டம் 

கூட்டமாக வந்து நீண்ட வரிசையில் சில மணி நேரங்களாக காத்திருந்தும், அலை மோதி கொண்டும் உற்சாகத்துடன் கை பிடிக்க முடியாத அளவிற்கு பிரியாணியை வாங்கி சென்று வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!