புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்த எம்எல்ஏ..!
தருமபுரி மாவட்டம்,பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி, கீழ் ராஜா தோப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தை பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து
பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைவாணி, செயற்பொறியாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர் சம்பத், கோபால், துணைத் தலைவர் ஜெகநாதன் மற்றும் கட்டிட ஒப்பந்தர் சசிகுமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment