18 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு மூலிகை ஆராய்ச்சி பயிற்சி அளிக்கும் கல்லூரி..!

தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்போது மருத்துவத்துறையில் மூலிகை பயன்பாடுகள் அதிகரித்து வருவதால் இந்த மூலிகை ஆராய்ச்சிக்கு ஸ்ரீ கிருஷ்ணா பாராமெடிக்கல் கல்லூரி முக்கியத்துவம் கொடுத்து மாணவ, மாணவிகளை சேலம் மாவட்டத்தில் இருக்கும் காரியாபட்டி பகுதியில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவன மையத்திற்கு கடந்த 26 ஜூலை மாதம் அழைத்து சென்று நேற்று 9 ஆகஸ்ட் வரை மொத்தம் 14 நாட்களாக மூலிகை பயிற்சி அளிக்கப்பட்டது. 

இதில் சுமார் 200 மாணவ, மாணவிகள் மூலிகை ஆராய்ச்சி குறித்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மருத்துவம் சார்ந்த மூலிகை பயன்பாட்டுகளை அறிந்து கொண்டு பின்னர் அதன் செயல்முறை விளக்கம் குறித்து தருமபுரி அரச சித்த மருத்துவர் பாலசுப்பிரமணி, புனிதா தலைமையில் மாணவ, மாணவிகளிடம் செயல்முறை விளக்கம் கையேடுகளை குறித்து விரிவாக மாணவர்களிடம் கேட்டறிந்தார்கள். பின்னர் கல்லூரி பேராசிரியர்கள் மகேஸ்வரி, ரஞ்சிதா குமுதா, செல்வி, கல்லூரி துணை பேராசிரியர் சந்தியா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்கள் செயல் முறை விளக்கம் கையேடுகளை அவர்களிடம் பார்வைக்கு அளிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மூலிகை ஆராய்ச்சி பயிற்சி ஆனது 18 ஆண்டுகளாக மாணவ, மாணவிகளுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருவதாக கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக செய்திருந்தார்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!