78வது சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை...!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 78வது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக்கொடி ஏற்றிவைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 


தொடர்ந்து பள்ளி  மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கண்கவரும் வகையில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இந்நிகழ்வில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் , கூடுதல் ஆட்சியர் பிரியங்கா , மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து  சமாதான புறாவினை மாவட்டஆட்சியர், மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பறக்கவிட்டனர். நிகழ்ச்சியில் அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய 233 அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். 


மேலும் சுதந்திர தினத்தையொட்டி   தையல்இயந்திரம் , சலவைபெட்டி , வேளாண் பொருட்கள் , மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் என 55 பயனாளிகளுக்கு 24 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்டங்களை  மாவட்டஆட்சியர் வழங்கினார். 78 வது சுதந்திரதின விழாவில் பள்ளி மாணவ , மாணவிகள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும்  கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு  மாணவ, மாணவிகளை பாராட்டினார். இதில் அரசு துறை அலுவலர்கள் , பொதுமக்கள் , பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு  களப்பால் காவல் நிலைய வளாகத்தில்  எஸ்ஐ தேவதாஸ் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்வில் களப்பால் போலீசார்  ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!