அதிமுக ஆட்சியில் தான் அதிகமான கொலைகள் நடபதாக தமுமுக தலைவர் ஜவஹருல்லா பேட்டி ..!
அதிமுக ஆட்சியில்தான் அதிகமான கொலைகள் நடந்துள்ளது .தமுமுக தலைவர் ஜவஹருல்லா பேட்டி
தருமபுரியில் பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை குறித்து இரங்கல் தெரிவிக்க தமுமுக தலைவர் ஜவஹருல்லா தருமபுரிக்கு வருகை புரிந்தார். இறந்து போன முகமது ஆசிப் குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்து பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கு தமுமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டது. அதில் கொலை குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனையும் உயிரிழந்து குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்து பின்னர் அவர் பத்தரிக்கையாளர்களை சந்தித்த அவர் அப்பொழுது ஆசிப் என்ற இளைஞர் உணவகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது வெறிபிடித்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஆசிப் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த பின்னணியில் தான் இந்த படுகொலை நடந்துள்ளது. இது ஒரு ஆணவ படுகொலை ஆகும் ஆசிப் சாதாரண குடும்பத்தை சார்ந்தவன் அந்தப் பெண்ணை சார்ந்த குடும்பம் செல்வம் செழிப்பான குடும்பம், சாதி மதத்தை தாண்டி இது ஒரு ஆணவ படுகொலை நடந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஆர்சிப்பின் வீட்டிற்கும் அவர் பணியாற்றிய உணவத்திற்கும் நேரில் சென்று விபரங்களை சேகரித்து மாவட்ட கலெக்டரையும் மாவட்ட எஸ்பிஐயும் நேரில் சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இந்த கொலையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் இந்தப் படுகொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் ஆசிப் படுகொலை செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். ஆசிப்பின் குடும்பத்திற்கு பத்து லட்சம் இழப்பீடு தொகையும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசின் வேலையும் வழங்க வேண்டும் கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். போதைக்கு எதிராக தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் வேகப்படுத்த வேண்டும். போதை பொருள் தொடர்பு உள்ளவர்களை கடுமையான சட்ட திட்டங்களல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சியில் தான் கொலைகள் அதிகமாக நடப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் அதிமுக ஆட்சியில் தான் அதிக கொலைகள் நடந்துள்ளது. இதை தமுமுக தலைவர் ஜவஹருல்லா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Comments
Post a Comment