தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

தருமபுரி ஒருங்கிணைந்த மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்க மாவட்ட ஆலோசனை கூட்டம் தருமபுரி தனியார் திருமண மண்டபத்தில் தருமபுரி மேற்கு மாவட்ட  உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர்  பொப்பிடி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு உழவர் பேரியக்க தருமபுரி  கிழக்கு மாவட்ட செயலாளர் சின்னசாமி அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்க தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் ஐயப்பன், உழவர் பேரியக்க தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் ஆலயமணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில், தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுசாமி  உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். 

இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம் மிகவும் வறட்சியான மாவட்டம், தருமபுரி மாவட்டத்தில் விவசாய பாசன வசதி பெறும் அளவிற்கு எந்த நீர்த்தேக்கமும் இல்லை, பல ஆண்டுகளாக பருவ மழை பொய்த்த காரணத்தால் நிலத்தடி நீர் என்பது சராசரியாக ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டதால் விவசாயம் பொய்த்து போய்விட்டது. விவசாயத்தையே முழுமையாக நம்பி இருக்கக்கூடிய தருமபுரி மாவட்ட மக்கள் வேலை வாய்ப்பின்றி, வாழ்வாதாரம் தேடி வெளி மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் புலம்பெயர்ந்து கூலி தொழில் செய்து பிழைப்பு நடத்தும் அவல நிலையில் உள்ளனர். தருமபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியில் வற்றாத ஜீவநதியாக காவிரி பாய்ந்து ஓடுகிறது. ஆண்டுக்கு ஆண்டு மழைக்கால  உபரி நீர்  கடலில் வீணாக கலக்கின்றன. காவிரியில் செல்லும் மழைக்கால உபரி நீரை நீரேற்றும் பம்பு மூலம் தருமபுரி மாவட்டத்திலுள்ள   அனைத்து ஏரிகள், குளங்களுக்கு நிரப்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதன் மூலம் தருமபுரி மாவட்டத்தில் பாசன வசதி பெருக்க முடியும் எனவே தருமபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தினர்.

தருமபுரி மாவட்டத்தில் தனியார் பால் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களிடம் குறைந்த விலைக்கு பாலை கொள்முதல் செய்கின்றனர். பால் உற்பத்தியாளர்கள் மாட்டு தீவனங்கள் அனைத்தையும் விலைக்கு வாங்குகின்றனர். தற்பொழுது தீவனங்களின் விலையும் அதிகரித்திருக்கின்ற காரணத்தினால் அவதியுறுகின்றனர். தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி விலை நிர்ணயிக்க வேண்டும். தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள் விலை உயர்வு உயர்த்தி வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென தருமபுரி மாவட்ட தமிழ்நாடு உழவர் பேரியக்கம் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


இதில் பாரிமோகன், பாடி செல்வம், பெ.சாந்தமூர்த்தி, முருக சாமி, அரசாங்கம், செல்வகுமார், மதியழகன், இமயவர்மன், கிருஷ்ணன், அன்பழகன், சரவணகுமாரி, அல்லிமுத்து, ராமலிங்கம், ராமகிருஷ்ணன், திருவேங்கடம்,  சரவணன்,  வன்னிய பெருமாள், சிவக்குமார், சின்னசாமி, ரவி, கோவிந்தசாமி, தேவேந்திரன் மற்றும்  தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பாட்டாளி மக்கள் கட்சி மாநில, மாவட்ட, ஒன்றிய,  நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!