ஆவடியில் ஹரே கிருஷ்ணா திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை..!
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த ஜே பி எஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா திருக்கோவிலில் 22 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி திருவிழா ஹரே கிருஷ்ணா சேவா டிரஸ்டின் சார்பாக ஆலய நிர்வாகி சரவணன் ஷியாம் முராரி தாஸ் தலைமையில் நடைபெற்றது. ஆலயத்தில்
அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ண பல ராமர் மற்றும் ராதாகிருஷ்ணன் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் உறி அடித்தல் கிருஷ்ணர் பூமியில் அவதரித்தது போல் நாடகம் மற்றும் பஜனைகள் பக்தி பாடல் குழந்தைகள் பரதநாட்டியம் நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசுகளும் கேடையம் வழங்கி ஆலயம் சார்பாக கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Comments
Post a Comment