கல்லூரியின் 12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு மற்றும் 17-வது ஆண்டு துவக்க விழா..!
தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொண்டு நிறுவனம் நடத்தும் ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் 12 -ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா மற்றும் 17-வது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் மணி ,
தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் , மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், மூத்த சிவில் நீதிபதி( ஓய்வு) ராஜாராம், மாவட்ட மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி , மாவட்டச் செயலாளர் அண்ணா தொழிற்சங்கம் பழனிசாமி , அறுவை சிகிச்சை நிபுணர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆசிரியர் சௌந்தரபாண்டியன் இவ்விழாவின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரியின் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி உரையாற்றினார். இதில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் திரளாக பங்கேற்றனர். இறுதியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Comments
Post a Comment