நேரு யுவகேந்திரா சார்பில் மை பார்த் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி முகாம்..!
தருமபுரி மாவட்டம் நேரு யுவ கேந்திரா சார்பில் மை பார்த் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிமுகாம் (Swachhata Hi Seva 2024 நிகழ்ச்சியானது கக்கன் இளைஞர் நற்பணி சங்கம் மூலம் ஜெய் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஜெய் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனிராஜ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் முருகேசன் ஊராட்சி மன்ற
துணைத்தலைவர் கலந்து கொண்டு தூய்மையே சேவை பணி முகாம் பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார். முன்னதாக தூய்மையே சேவை பற்றிய உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மையே சேவை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் JSV கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் காந்தி, நித்யா, ரவி, ஜெயலஷ்மி ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள். இதனை தொடர்ந்து பாப்பிநாயக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள பொது இடங்களில் தூய்மைப்பணி மேற்க்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் அதியமான் TV யின் இயக்குனர் கபில்தேவ், கக்கன் இளைஞர் நற்பணி சங்கத்தை சேர்ந்த பாவெல்ராஜ், பரமசிவம், ராமசந்திரன், நரேன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்பணி மேற்க்கொண்டனர்.
இறுதியில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் பசுபதி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர்கள் சுகந்தி மற்றும் பசுபதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


.jpeg)
Comments
Post a Comment