அங்கன்வாடி மைய கட்டிடம் திறந்து வைத்த எம் எல் ஏ..!

 தருமபுரி அடுத்து இலக்கியம்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகில், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கப்பட்டது. அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் சுகந்திபிரியா, பொறுப்பு ஜெயந்தி, குழந்தைகள் வளர்ச்சி தொகுதி மேற்பார்வையாளர் தமிழ்மணி, பாமக மாநில துணை தலைவர் பெ.சாந்தமூர்த்தி, மாவட்ட பொறுப்பாளர் இ.மா.பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் யுவராஜ், ஒன்றிய அமைப்பு செயலாளர் திருமூர்த்தி, முன்னாள் வார்டு உறுப்பினர் ரவி, நிர்வாகிகள் காமராஜ், பெருமாள், மனோகரன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!