இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை காசோலைகள் வழங்கும் விழா..!

 தருமபுரியில் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறக்கட்டளை மற்றும் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கம்- தகடூர் இணைந்து நடத்தும் இரண்டாம் ஆண்டு கல்வி உதவித்தொகை (காசோலைகள்) வழங்கும் விழா நடைபெற்றது. 

தருமபுரி மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் துரைராஜ்,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி பாலசுப்பிரமணியம் , தலைவர் பாராலிம்பிக் சங்கம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  செண்பகவல்லி தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், கல்பனா சந்திரசேகர் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் பொருளாளர் வினோத்குமார் வரவேற்புரை ஆற்றினர். கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகரக் கழகச் செயலாளர் நாட்டான் மாது , கோவிந்த், ரமேஷ், மாணிக்கம், குமரவேல், மகாலட்சுமி ரமேஷ், செந்தில் முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல்வாழ்வு சங்கத்தின் செயலாளர் கோவிந்தராஜ் நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் சங்க நிர்வாகிகள் மற்றும் தங்கமணி, முல்லைவேந்தன், ராஜா, ரேணுகா தேவி,  மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!