7 ஊர் பொதுமக்கள் கொண்டாடும் திரௌபதி அம்மன் திருவிழா..!
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி குளத்தங்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை வருடா வருடம் நடைபெறும் திருவிழா வருகின்ற 04-10-2024முதல்12-10-2024 வரை நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல் வெள்ளிக்கிழமை 04-10-2024 மாலை 4 மணி கோவிலில் இருந்து சாமி சிலைகள் கூத்தப்பாடி மண்டு எடுத்து செல்லுதல்,சனிக்கிழமை 05-10-2024 கூத்தப்பாடி கிராமத்தில் காலை 10 மணி அளவில் சாமி சிலைகள்ஊர்வலம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை குள்ளாத்திரம்பட்டி கிராமத்தில் 06-10-2024 காலை 8 மணியளவில் தீமிதி திருவிழா மற்றும் ஊர்வலம் நடைபெறும். திங்கட்கிழமை 07-10-2024 பொச்சாரம்பட்டி மற்றும் அளேபுரம் கிராமத்தில் ஊர்வலம் நடைபெறும். செவ்வாய்க்கிழமை 08-10-2024 அக்ரகாரம் கிராமத்தில் ஊர்வலம் நடைபெறும். புதன்கிழமை 09-10-2024 தன் தாய் கிராமமான மடம் கிராமத்தில் ஓய்வு வியாழக்கிழமை 10-10-2024 காலை 8 மணி அளவில் தீமிதி திருவிழா மற்றம் ஊர்வலம் நடைபெறும், மாலை 3 மணி அளவில் கீழூர் கிராமத்திற்கு சாமி சிலைகள் எடுத்து வருதல் மற்றும் ஊர்வலம் நடைபெறும் மாலை 5 மணி அளவில் தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்கு எடுத்துச் வெள்ளிக்கிழமை 11-10-2024 காலை 8 மணி அளவில் சின்னப்பநலூர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லுதல் சின்னப்பநல்லூர்கிராமத்தில் சனிக்கிழமை 12-10-2024 காலை 5 மணி அளவில் 108 கங்கா பூஜை செய்தல் பூஜை முடிந்தவுடன் தீமிதி அக்னி குண்டம் இறங்குதல் தொடர்ந்து ஊர்வலம் நடைபெறும் மாலை 4 மணி அளவில் அம்மனுக்கு தாலாட்டுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது. அனைவரும் வந்து அம்மன் அருள் பெற பென்னாகரம் தேஜஸ் அகாடமியின் சார்பாக அன்புடன் வரவேற்கின்றனர் .

Comments
Post a Comment