சைபர் குற்றம், போதை பொருள் ஒழிப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு..!
திருத்துறைப்பூண்டி அருகே கிராம மக்களுக்கு காவல்துறை சார்பில் சைபர் குற்றம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே களப்பால் காவல் காவல் துறை சார்பில் மாரிநகரி கிராமத்தில் காவல் ஆய்வாளர் சுப்ரமணியன், எஸ்ஐ தேவதாஸ், எஸ்பி ஏட்டு தாமோதரன் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும் இணையத்திலோ செல்போனிலோ உங்களது சுய விபரங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்கக் கூடாது என்றும் இருசக்கர வாகன ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், கார் ஓட்டும்போது அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும்
மேலும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மேலும் பண மோசடிகள் குறித்த தொடர்புக்கு 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் என துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாரிநகரி கிராம தலைவர் எழிலரசன் செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் தனாபால் ஆகியோர் செய்திருந்தனர்.


Comments
Post a Comment