பூமிபூஜை மற்றும் முடியுற்ற பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ..!
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், மானியதஅள்ளி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் பொடாரான்கொட்டாய் அரசு துவக்கப்பள்ளியில் ரூபாய் 2 லட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது.
மேலும், மானியதஅள்ளி கடத்திக்குட்டை சிவபெருமான் கோவில் பகுதியில் ரூபாய் 2.80 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றிற்கு மின்மோட்டார், குடிநீர் பைப் லைன் மற்றும் மினி டேங்க் அமைக்கப்பட்டது.
இப்பணிகளை பயன்பாட்டிற்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, சாமிசெட்டிப்பட்டி ஊராட்சி, கமலநத்தம் கிராமத்தில் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்காக பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வுகளில், பாமக மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் காமராஜ், ஒன்றிய செயலாளர் அறிவு, மாவட்ட துணைத் தலைவர் முத்துவேல் மற்றும் நிர்வாகிகள் பச்சியப்பன், மூர்த்தி உள்ளிட்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


Comments
Post a Comment