ஸ்டாலின் அரசை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..!
தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு, மற்றும் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் விடியா ஸ்டாலின் அரசை கண்டித்து இன்று மனித சங்கிலி போராட்டம் நகர செயலாளர்கள் தென்னரசு,சந்தோஷ்,ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, மாவட்ட சேர்மன் யசோதா மதிவாணன் ஆகியோர் கலந்துகொண்டு திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன பேரூறையாற்றினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், விஸ்வநாதன்,சேகர் பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சிஎம்ஆர் முருகன், அதிமுக நிர்வாகிகள் சரவணன், கென்னடி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments
Post a Comment