தேஜஸ் அகாடமியில் படித்து அரசு பணி செல்வோருக்கு பாராட்டு விழா..!
தேஜஸ் அகாடமியில் படித்து அரசு பணி செல்வோருக்கு "பாராட்டு விழா"
தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள தேஜஸ் அகாடமியில் படித்து தமிழ்நாடு காவல்துறை இரண்டாம் நிலை காவலராக தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லும் பயிற்சி மைய மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தேஜஸ் அகாடமியின் நிறுவனர் M.கண்ணையன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டி, சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது:- 2021-ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில் ஆண்டுதோறும் TNPSC,TET, DEFENCE, POLICE உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் தேர்ச்சி பெற்று பணிக்கு செல்கின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக எனது பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய கால கட்டத்தில் அரசு பணி என்பது கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனியாக உள்ளது. அதனை எளிமையாக்கவே இந்த பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன். இம்மையத்தின் மூலம் இன்னும் சில ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களை கட்டாயம் அரசு பணிக்கு அனுப்புவதே எங்களுடைய நோக்கமாகும். தற்போது பணி நியமன ஆணை பெற்று இரண்டாம் நிலை காவலராக பணிக்கு செல்லும் அனைத்து காவலர்களுக்கும் என்னுடைய பாராட்டை தெரிவிப்பதோடு நமது தேஜஸ் அகாடமியில் படித்த 30 மாணவர்களில் 22 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இனிவரும் காலங்களில் எமது பயிற்சி மையத்தில் பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைப்பதே குறிக்கோள் என்றும் , புதிதாக தொடங்கப்பட்ட வகுப்பில் கலந்து கொண்டு இருக்கும் அனைவரும் அடுத்த ஆண்டு தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்ல என்னுடைய வாழ்த்துக்கள். கடின உழைப்பு, பயிற்சி, சரியான வழிகாட்டுதல் மட்டுமே உங்களுடைய வெற்றிக்கு வழிவகுக்கும்"என அவர் சிறப்புரை ஆற்றினார்.

.jpeg)
Comments
Post a Comment