தருமபுரியில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்க கால்கோள் பூஜை..!

 தருமபுரியில் மூன்றாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, கால்கோள் பூஜை செய்து பணிகள் சிறப்பாக நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் மண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மூன்றாம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி நடத்துவதற்கு தடங்கம் மண்டு மாரியம்மன் கோவில் வளாகத்தில் கால்கோள் நடும்  பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வாடிவாசல், பார்வையாளர் மாடம் உள்ளிட்ட தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில்  காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வதற்கு, இணைய வழியில் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஜல்லிக்கட்டு பேரவையினர் தெரிவித்தனர். இந்த கால்கோள் பூஜையில் ஜல்லிக்கட்டு பேரவையினர் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!