தெத்துபள்ளம் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய தருமபுரி எம்.பி..!
தெத்துபள்ளம் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய தருமபுரி எம்.பி..!
தருமபுரிமாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், பிக்கனஅள்ளி ஊராட்சியில் உள்ள தெத்துப்பள்ளம் மலை கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மலைவாழ் இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடும் நிகழ்ச்சி மாநில விவசாய அணி துணைத் செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கில் கோபால், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இன பெண்கள் பாரம்பரிய முறைப்படி, கரும்பு, மஞ்சளுடன், வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்து சூரியனக்கு படைத்து பொங்கலோ பொங்கல் என்று ஆராவாரம் செய்து பொங்கல் விழா கொண்டாடினர். இதில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்கள் கலந்து கொண்டு இருளர் இன மக்களுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடி, அப்பெண்களுக்கு சேலைகளை வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் இல.கிருஷ்ணன், முனியப்பன், பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பிக்கனஅள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதிசுப்ரமணி, சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், ஆனந்தன், ராஜபாட், குமரவேல், ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி, முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய துணை செயலாளர்கள் பெரியசாமி, ரவி, வார்டு உறுப்பினர் தங்கவேல் கிளை கழக செயலாளர்கள் முனுசாமி, சிவாஜி, சிவக்குமார், கோவிந்தராஜ், கிளை கழக நிர்வாகிகள் முனுசாமி, குண்டன், காட்டுராஜி, அண்ணாமலை, சூர்யா, ராஜமாணிக்கம், பிரேம்குமார், கவுன்சிலர் சரவணன், பிரியாகுமார் மற்றும் உள்ளிட்ட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

.jpeg)
Comments
Post a Comment