ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இலக்கியம்பட்டி ஶ்ரீ சாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சி..!

 ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு இலக்கியம்பட்டி  ஶ்ரீ சாலை  மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் திருவீதி உலா நிகழ்ச்சி..!

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஸ்ரீசாலை மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத முதல் நாளை முன்னிட்டு சாமிக்கு  தேன், பால், சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்கள் அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இலக்கியம்பட்டி,செந்தில் நகர், அழகாபுரி,அண்ணா நகர், கொட்டாய், கலெக்டரேட் ஆகிய பகுதியில் மேளதாளம்  முழங்க சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் சாமி திருவீதி உலா வரும்பொழுது வழிநெடுங்க பக்தர்கள் சாமியை வழிபாடு செய்தனர். இதில் ஊர் நிர்வாகிகள் பழனிச்சாமி, சாமிநாதன், காளியப்பன், பழனிச்சாமி, கோவிந்தராஜ், சிவா,தயாநிதி, கௌதம், ராம்குமார், இலக்கியம்பட்டி M வெங்கடேஷ் , அருண்குமார், சந்தோஷ், கோவில் பூசாரி மாது, ஊர் பொதுமக்கள், இலக்கியம்பட்டி இளைஞர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

கோவில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு..!

பாலக்கோட்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற கோரி ஆட்சியரிடம் மனு..!

பாலக்கோட்டில் வேலன் புதிய மொபைல் ஷோரூம் திறப்பு விழா..!