தருமபுரியில் நீருக்கடியில்கடல் மீன் கண்காட்சி தொடக்கம்..!
தருமபுரியில் நீருக்கடியில்கடல் மீன் கண்காட்சி தொடக்கம்..!
தருமபுரி சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள வள்ளலார் திடலில் வண்ண மீன்களுடன் கூடிய கடல் மீன் கண்காட்சி மற்றும் பொழுது போக்கு அம்சங்களுடன் கண்காட்சி இன்று முதல் தொடங்கியது.
இக்கண்காட்சியை நகராட்சி துணைத் தலைவர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் .
இதுகுறித்து கண்காட்சி க அமைப்பாளர்கள் டி.ஜே. அம்யூஸ்மெண்ட் மேலாண் இயக்குனர் தினேஷ் மற்றும் மேலாளர் ஆனந்த் ஆகியோர் கூறியதாவது:-
இக்கண்காட்சியானது திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இன்று முதல் செப்டம்பர் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், தத்துரூபமாக கடலுக்கு அடியில் சென்று பல விதமான வண்ண மீன்களை காணலாம். மேலும், பொழுதுபோக்குக் காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ராட்டினம், கொலம்பஸ் பிரேக் டான்ஸ், டிராகன்டி ரெயின், மினி ட்ரெயின், உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வீட்டு உபயோகபொருட்கள். உணவு பொருட்கள் விற்பனை கடைகள் உள்பட பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் இக்கண்காட்சி பொது மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி யாக மன நிறைவை ஏற்படுத்தும் என அவர்கள் கூறினர். இந்த கடல் மீன்கள் கண்காட்சியினை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து கண்டு களித்து பொழுதுபோக்கியும் மகிழ்ந்தனர்.




Comments
Post a Comment