தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக மாநிலம் தழுவிய மற்றும் மாவட்ட அளவிலான ஒரு நாள் தற்செயல் விடுப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டமானது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூபாய் பத்தாயிரம் ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்க வேண்டும், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பனிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலம் வரை ஊதியம் ரூபாய் 15,000 வழங்க வேண்டும், ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊராட்சி மூலம் வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இருப்பினை ஏதும் போது அஞ்சு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி கொண்டும் மற்றும் கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருவரும் செல்வம், செந்தில், மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment