தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உண்மையான ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டி உண்ணாவிரத போராட்டம்..!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உண்மையான ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மோசடியாக பணி நிரந்தரம் செய்ததை கண்டித்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட போராட்ட குழுவினர்கள் சார்பில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலி குழுவின் பரிந்துரையின்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் மோசடியாக பணி நிரந்தரம் செய்ததனால் பாதிக்கப்பட்ட உண்மையான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை போராட்டக் குழுவினர் நடத்தினர். உண்ணாவிரத போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் காலி கமிஷன் காலத்தில் உண்மையாக உழைத்த ஒப்பந்த தொழிலாளர்களை உரிய கள விசாரணை செய்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு வாரிய பணி வழங்க வேண்டும், மோசடியாக பணியில் சேர்ந்தவர்களை விசாரணை செய்து அடையாளம் கண்டு அவர்களுக்கு வாரியம் வழங்கிய பணப்பலன்களை திரும்ப பெற்று வாரிய கணக்கில் செலுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்கள் மோசடியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டதற்கு உதவிய அனைத்து பொறியாளர்கள், நிர்வாக பிரிவு அலுவலர்கள் மற்றும் காசுப் பிரிவு அலுவலர்கள் அனைவரையும் காவல்துறை மூலம் விசாரணை செய்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும், மின்வாரியத்தின் அடிப்படை பணிகளை பற்றிய குறைந்தபட்ச அனுபவம் கூட இல்லாதவர்கள் மோசடி பணி நியமனம் பெற்று பலதரப்பட்ட உயிர்களை பலி வாங்கிய பணியாளர்களை காவல் துறை மூலம் கொலை குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என உள்ளிட்ட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் போராட்டக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்து, பொன்னுரங்கம், கேபி செல்வராஜ், லோகிதரன், தங்கவேல், செல்வராஜ் மற்றும் போராட்டக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.


Comments
Post a Comment